News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 70
70. வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி
வல்லதாய் எல்லாமாகி எல்லாமும்
அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !
எல்லாச் செயல்களையும் செய்ய வல்லமை கொண்டவரும், இந்த உலகில் உள்ள பொருள்கள் எல்லாமே தானாகவே ஆகியுள்ளவரும், அதே சமயம் அந்தப் பொருள்கள் எவற்றுக்கும் உட்படாமல் வேறுபட்டதாய் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


