News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 72
72. தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று
ஆங்குற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !
சரம் – இயங்குபவை அசரம் – இயங்காதவை
ஆங்குற – பொருந்துமாறு
உலகங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கின்றவரும், இயங்கும் உயிர்களிலும் (சரம்), இயங்காத பொருள்களிலும் (அசரம்) நிலைபெற்று நின்று, அந்தந்தப் பொருள்களில் அதன் இயல்புக்கேற்பப் பொருந்தி விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


