News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 77
77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அது தரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !
இந்த உலகில் கண்களால் காணக்கூடிய பருப்பொருள்களின் வடிவமாகவும், கண்களால் காண முடியாத (ஆன்மா, உயிர்ச்சக்தி) சூட்சும வடிவமாகவும் இருந்து, ஆள்கின்ற அதிகாரமாக விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


