News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 83
83. எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என
அண்ணித்து இனிக்கும் அருட்பெருஞ்ஜோதி !
நினைத்துப் பார்க்கும்பொழுதே செழுமையான தேனின் சுவையை அளிப்பவராகவும், இனிமையான, தெளிந்த அமிர்தத்தைப் (சாகாவரம் தரும் அமிர்தம்) போலவும் விளங்கி, என்னை நெருங்கி வந்து எப்போதும் இனிமையாய் உள்ள அருட்பெருஞ்ஜோதியே!


