News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 90
90. எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி
எம் புயக் கனி என எண்ணுவார் இதய
அம்புயத்து அமர்ந்த அருட்பெருஞ்ஜோதி !
அம்புயம் – தாமரை
எம்புயம் – உள்ளங்கை
தியானித்து நினைப்பவர்களுக்கு உள்ளங்கையில் இருக்கும் இனிய கனி போல அருள்பாலிக்கும், உள்ளமாகிய தாமரை மலரில் (இதய கமலத்தில்) வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


