News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 97
97. எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
எத்தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு
அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி !
எத்தகை – எந்த வகை, தகுதி, நலன்கள்
எனது மனம், எந்தெந்தத் தகுதி வாய்ந்த சிறப்புகளையும், உயர்ந்த ஞானத் தன்மைகளையும் விருப்பத்துடன் கேட்டதோ, சரியாக அந்தத் தன்மைகள் அனைத்தையும் அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


