News
MAY 2026
தினம் ஒரு அகவல் 246
ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 246
ஞான சித்தியின் வகை நல் விரிவனைத்தும்
ஆனியின்றி எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !
தூய அறிவின் மூலம் அடையக்கூடிய ஞான சித்திகளின் வகைகள், அவற்றின் நன்மை நிறைந்த விரிவான பலன்கள் அனைத்தையும், குறைவில்லாமல் (ஆனியின்றி) என்னிடத்து நிலைபெற்று நிற்கும்படி எனக்கு அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


