News
MAY 2026
தினம் ஒரு அகவல் 256
இன்பசித் தியினிய லேக மனேகம்
அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 256
இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம்
அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி !
பேரின்பத்தைத் தரக்கூடிய சித்தியின் (ஆற்றலின்) இயல்பான தன்மை, ஒரே சக்தியாக இருந்து பலவிதமான இன்ப அனுபவங்களாக விரிந்து வெளிப்படுவதாகும். அந்த இன்பம் அனைத்தும் ஜீவகாருண்யம் என்னும் அன்பு நெறியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது என்று எனக்கு உணர்த்திய அருட்பெருஞ்ஜோதியே!


