News
MAY 2026
தினம் ஒரு அகவல் 262
படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி – 262
படி முடி கடந்த எனை பாரிது பார் என
அடி முடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி !
தவத்தின் எல்லா நிலைகளையும் நீ வெற்றிகரமாகக் கடந்துவிட்டாய், இனி ஞானத்தால் எல்லையற்ற உலகத்தைக் காண் என்று கூறி, தனது ஆதியும் அந்தமும் காண முடியாத, எல்லையற்ற முழு வடிவத்தை எனக்குக் காட்சி அளித்த அருட்பெருஞ்ஜோதியே!


