News
JULY 2026
14th July 2026
தினம் ஒரு அகவல் 368
மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 368
மண்ணினில் திண்மையை வகுத்து அதில் கிடக்கை
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
மண் தத்துவமான இந்த பூமியை உறுதியானபடி வைத்து, அதன் மேல் உள்ள அசையும் அசையா பொருள்களை பூமியுடன் நெருக்கமாக வைத்து அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


