News
JULY 2026
தினம் ஒரு அகவல் 370
மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 370
மண்ணினில் பொன்மை வகுத்து அதில் ஐமையை
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
ஐமை – அழகு பொருந்திய / ஐந்து நிறங்கள்
பொன் கூட விளையும்படி இந்த பூமியை வகுத்து அதில் பல்வேறு தன்மைகளை கொண்ட மண் வளங்களை உண்டாக்கி அவற்றை இந்த பூமியோடு பொருந்தி அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


