News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 418
நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 418
நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீர் என்னும் பூதத்தில் ஒளியின் இயல்பையும், அதனால் விளங்கும் பலவிதமான குணங்களின் இயல்பையும் நிகழச் செய்து, அதன் மூலம் உயிர்கள் இன்பம் அடையும் பொருட்டு முறையாகப் பகுத்து அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


