News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 424
நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 424
நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல
ஆர்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நீர் என்னும் பூதத்தின் துணைகொண்டு, பலவிதமான உயிர்களும், அவற்றிற்குத் தேவையான பலவிதமான பொருள்களும் உண்டாகச் செய்து, உயிர்கள் இன்பம் அடைந்து வாழும்படி முறையாக அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


