News
AUGUST 2026
13th August 2026
தினம் ஒரு அகவல் 428
நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 428
நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆர்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நீரை, உலக உயிர்கள் பயன்படுத்துவதற்கேற்ற பக்குவமான நிலையில் நிறுத்தி, அதன் மூலம் உண்டாகும் எண்ணற்ற நிறைவான பயன்பாடுகளை உயிர்கள் அனுபவிக்கும்படி முறையாக அமைத்து அருளிய பேரருள் ஒளியே!


