News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 520
அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 520
அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை
அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி
ஒரு மனிதனின் உள் (ஆன்மா), வெளி (உடல்), நடு (தொடர்பு), முதல் (தோற்றம்) ஆகிய அனைத்து நிலைகளையும் தன் அருளாலே ஒன்றிணைத்து, , முடிவு வரை அதன் இயக்கங்கள் எல்லாமே தன்னுள்ளே அடங்கி இயங்குமாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


