News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 528
அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 528
அகநடு புறத்தலை அணைந்து அகப்புறக்கடை
அகலிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உள்ளத்தின் நடுவே இருந்தும், புறத்தின் முதன்மையான இடத்தில் பொருந்தி இருந்தும், உள்ளேயும் வெளியேயும் உள்ள எல்லாவற்றின் முடிவிலும் நிலைபெற்று, இந்தப் பரந்த விரிந்த உலகத்தில் ஒழுங்குறப் பிரித்து அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி!


