News
OCTOBER 2026
10th October 2026
தினம் ஒரு அகவல் 530
அகநடு வதனா லகப்புற நடுவை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 530
அகநடு அதனால் அகப்புற நடுவை
அகம்அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உள்ளத்தின் நடுவே தான் நிலைத்திருப்பதன் காரணமாக, உள்ளே மற்றும் வெளியே உள்ள அனைத்துக்கும் மையமாக இருக்கும் நிலையை, உள்ளம் விட்டு நீங்காத வண்ணம் அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி!


