News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 564
பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 564
பரவெளி அதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பரவெளி – சுத்த வெளிக்கு மேலான வெளி
பரம்பர வெளி – பரவெளிக்கு மேலான வெளி
சுத்த வெளிக்கு மேலாகச் சொல்லப்படும் பரவெளியானது, அதற்கும் மேலான மூலமான பரம்பர வெளியில் ஒரு பேரரசைப் போல நிலைபெற்று அரசாட்சி செய்யும்படி அந்த வெளிகளை வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


