News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 580
இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி – 580
இவ்வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்
அவ்வயின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வள்ளல் பெருமான் இங்கு அண்ட – பிண்ட தத்துவத்தைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, நம் உடலுக்குள் (பிண்டம்) என்னென்ன உணர்வு நிலைகள் (வெளிகள்) இருக்கின்றனவோ, அவை அனைத்தும் வெளியே பிரபஞ்சத்திலும் (அண்டம்) இருக்கின்றன.


