News
NOVEMBER 2026
22nd November 2026
தினம் ஒரு அகவல் 614
கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி – 614
கடல் அவையனைத்தும் கரையின்றி நிலையுற
அடல் அனல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
தடுப்புகள் இல்லாத கடல், நிலையாக இருக்கும் இடத்தில் இயங்கும்படியாக வலிமையான நெருப்புச் சுழற்சியை ( வடவாக்னி ) அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !


