News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 622
ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி – 622
ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
அன்றற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
ஒரு பொருளுக்குள் மற்றொன்று அடங்கியிருக்கவும், அந்த ஒவ்வொன்றிற்குள்ளும் ஆயிரக்கணக்கான நுட்பமான வேறுபாடுகள் இருக்கவும், ஆதி காலத்திலேயே எவ்விதப் பிழையுமின்றித் துல்லியமாக வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


