News
JUNE 2022
குரு உபதேசம் – 3343
சிந்தித்தால் கந்தனையே சிந்திக்க வேண்டும் என்று அறியலாம்.
ஒப்பற்ற அருணகிரி ஓதிய அலங்காரம் தப்பின்றி கற்றிட தான் அவனாமே.
அருளாளன் அருணகிரி அருளிய அலங்காரம் அருளாளரே கற்று அகம் மகிழ்வர்.
ஒரு சொல்லே வேதம் என்று உரைத்த அனுபூதி ஒரு சொல்லே வேதம் என்று உணர்தல் அறிவே.
உயிர்களெல்லாம் முருகன் என்று உரைத்த அனுபூதி உயிர்களெல்லாம் முருகன் என்றே உணர்தல் அறிவே
கந்தனைப் போற்றுவோம்! கடப்போம் பிறப்பை!!