News
JUNE 2022
குரு உபதேசம் – 3367
நாம் செய்த புண்ணியத்தால் தான் நமக்கு தலைவனாக உண்மை ஞானதெய்வம் முருகப்பெருமானே நமக்கு வழிபாட்டிற்குரிய தெய்வமாய் அமைந்திட்டதையும் உணரலாம்.
அருளாளன் அருணகிரி அருளிய அலங்காரம் அருளாளர் கற்றே அகம் மகிழ்வர்.
பொருளறிந்த அருணகிரி புகன்ற அலங்காரம் பொருளறிந்து கற்பவரே புண்ணியர்.
உடைய அருணகிரி ஓதிய அலங்காரம் தடையற கற்றிட தான் அவனாமே.
வேதனாம் அருணகிரி விளம்பிய அலங்காரம் காதலாய் கற்றிட காணலாம் வீட்டை.