News
JULY 2022
குரு உபதேசம் – 3378
முருகன் அருள்கூடி தான தருமங்களை தவறாது செய்து செய்து, முருகனின் அருளாசிகளைப் பெற்றும் பிற உயிர்களின் மனமகிழ்வை பெற்றாலும், நாம் அருள் பெற தடையாய் இருப்பது முதலில் நாம் உண்ணுகின்ற உணவிலேதான் பெரும்பாவம் செய்கிறோம் என்பதை உணர்வான். ஆதலினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து முதலில் சைவத்திற்கும், பிறகு சுத்த சைவத்திற்கும் அதன் பின் வீரசைவ நெறிக்கும் அதன்பின் அதிவீர சைவநெறிக்கும் வந்து காமத்திற்கு காரணமாய் உள்ள இத்தேகத்தினை கட்டுப்படுத்தி காமத்தினால் விளையும் வினைகளை குறைத்திடுவான்.