News
AUGUST 2022
குரு உபதேசம் – 3429
முருகா என்றால், இளமை, அழகு, கல்வி, பதவி இன்னும் அநேக சிறப்புகள் இருந்தாலும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்ற மகா மந்திரத்தை சொல்லியும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தால்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும். நாம் பெற்ற இளமையும், அழகும், கல்வியும், பதவியும் இன்னும் பெற்ற எல்லாமும் ஒரு காலத்தில் அழிந்தே போய்விடும் ஆனால் என்றும் அழியாத முருகனின் அருள் மட்டுமே ஆன்மாவைப் பற்றி தொடர்ந்து அழியாது உடன்வருவதுடன் நம்மையும் அழிவிலாமையாகிய மரணமிலாப் பெருவாழ்வையும் தந்து அழிவிலாமையை அருளி, என்றும் பிறப்பு இறப்பற்ற பேரின்ப நிலையைத் தரும்.