News
OCTOBER 2022
குரு உபதேசம் – 3490
முருகனை வணங்கிட, எந்தெந்த வகையில் தொடர் பிறவி ஏற்படும் என்றும், அதற்கு காரணம் என்ன என்பதையும் அறிந்து நீக்கிக் கொள்ளலாம். நிலையில்லாத உடம்பை பெற்ற நாம் முருகன் அருளால் நிலையில்லாத உடம்பை நிலையான உடம்பாக உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறியலாம். முருகப்பெருமான் திருவடியே வேதம் என்றும், அவன் நாமஜெபமே தவம் என்றும், அவனது நாமமே மந்திரம் என்றும், அவனது ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும், அதில் வெற்றி பெறுவதே ஞானம் என்றும் அறிந்து கொள்ளலாம்.