News
JANUARY 2023
குரு உபதேசம் – 3566
முருகா என்றால், காமத்தால் வருகின்ற கேடுகளிலிருந்தும், கோபத்தால் வருகின்ற கேடுகளிலிருந்தும், பொறாமையால் வருகின்ற கேடுகளிலிருந்தும், பொருள் பற்றினால் வருகின்ற கேடுகளிலிருந்தும், தான் என்ற கர்வத்தினால் வருகின்ற கேடுகளிலிருந்தும் நம்மை நீக்கி, முருகன் அருள் நம்மை காப்பதோடு, முருகன் கருணையால் குணக்கேடுகளிலிருந்து விடுபட்டு, தூய்மையான மனிதனாக, பண்புள்ள மாமனிதனாக, குற்றமற்ற யோகியாய் மிக மிகத் தூய்மையான ஒளிதேகம் பெற்ற ஞானியாகவும் ஆகிடலாம் என்பதையும் அறியலாம். அழுக்கு துணியை துவைக்க துவைக்க துணியிலுள்ள அழுக்கு பிரிந்து துணி தூய்மையாவது போல, நம்முள் உள்ள குணக்கேடுகளை முருகன் தூய்மைப்படுத்தி நம்மை தூய்மையாக்கி பண்பாளனாக்கி காப்பான்.