News
JANUARY 2023
குரு உபதேசம் – 3579
முருகா என்றால், ஞானத்திற்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து உலக நடையில், உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே காலையில் பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும், முடிந்தால் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ நாமஜெபங்களை மந்திரஜெபமாக கூறி முருகப்பெருமான் திருவடிகளை உளமார உருகி பூஜித்திட வேண்டும். ஜீவதயவின் தலைவனான முருகனின் ஆசியை பெற வேண்டுமாயின், முதல் தகுதியாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.