News
FEBRUARY 2023
குரு உபதேசம் – 3602
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
நவகோடி சித்தரிஷி கணங்கள் அனைவருமே முருகப்பெருமானின் தாயினும் மிக்க தயவுடை தனிக்கருணையைப் பெற்று முருகனை வணங்கி வணங்கி ஞானிகளானார்கள் என்பதும், ஞானிகள் முற்றுப்பெற்று முருகப்பெருமானோடு இரண்டற கலந்து விட்டனர் என்பதையும் அறியலாம். ஆதலினால் ஞானபண்டிதனின் திருவடியைப் பற்றி பூஜிப்பதும், அகத்தியர் முதல் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், அரங்கர் வரையிலான ஞானிகளில் எவர் திருவடியைப் பற்றி பூஜித்தாலும் அந்த பூஜையும் முருகனை வணங்கினதாகவே ஆகும் என்றும், ஞானிகள் இயற்றிய நூல்கள் எதுவாயினும் சரி அதை படிப்பது என்பது முருகனை பூஜிப்பதற்கு ஒப்பாகும் என்பதையும் அறியலாம்.