News
MARCH 2023
குரு உபதேசம் – 3619
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
மனிதனாக பிறந்து விட்டால் மட்டும் போதாது அவன் உண்மையிலேயே மனிதனாக ஆக வேண்டும். மனிதனாக பிறந்தவன் தம்மை வழி நடத்துகின்ற தலைவன் முருகனின் நாமங்களை ஏதேனும் ஒருவிதத்தில் பார்த்தோ, பார்த்து படித்தோ, கேட்டோ அல்லது முருகனது பெயர்களை கூவி அழைத்தோ முருகனின் நாமத்தை எந்த வகையாயிலும் எப்போது கூற ஆரம்பிக்கின்றானோ அப்போதுதான் அவன் மனிதனாகவே ஆகிறான். அதுவரை அவன் மனிதனாக பிறந்தாலும் ஜீவதயவின் தலைவனை அழைத்திடாத பட்சத்தில் மனிதப்பண்புகளை முழுமையாக கொண்டிருக்க முடியாது. ஆகையினாலே அவரவரும் பல வழிகளிலே மக்கள் பயனுறும் வகையிலே முருகனது நாமங்களை அனைவரும் சொல்ல ஏதுவாக முருகனது நாமங்களை பெயராகவோ, கடையின் பெயராகவோ என பலவிதத்திலும் பயன்படுத்துங்கள். முருகனது நாமங்கள் உலகெங்கும் ஒலிக்கட்டும் ஞானத்தலைவன் விரைந்து வெளிப்படட்டும்.