News
APRIL 2023
குரு உபதேசம் – 3648
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஆறறிவு உள்ள மனிதனுக்குத்தான் கடவுளை அடையும் மார்க்கம் உள்ளது. அதிலும் சிறப்பறிவு உள்ளவர்கள்தான் அந்த வழிமுறையை அடைய முடியும். அகத்தீசனை வணங்கினால்தான் சிறப்பறிவை பெற முடியும். சிறப்பறிவை பெற்றவர்கள்தான் ஜீவதயவினைப் பற்றி அறிந்து உணர்ந்து உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி தொண்டுகள் செய்து, ஜீவதயவைப் பெருக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதை அறியலாம்.