News
APRIL 2023
குரு உபதேசம் – 3665
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராய் விளங்கி, ஞானத்தலைவனாய் விளங்கி நின்று அருள்பாலித்து வாசி நடத்திக் கொடுக்கப்பட்ட முதன்மை சீடராம், சித்தர்கோன் என்றும் குருமுனி என்றும் சொல்லப்படுகின்ற அகத்தியர் பெருமான் முதல் நந்தீசர், திருமூலர், காலாங்கிநாதர், போகர், பட்டினத்தார், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், கருவூர்தேவர், இராமலிங்கசுவாமிகள் என நவகோடி சித்தரிஷி கணங்களைக் கொண்டதும், வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபினர் தம்மையும், முருகப்பெருமானையும் வணங்கினால், முற்றுப்பெற்ற ஞானிகள் கருணைக்கு ஆளாகி ஞானத்தலைவன் முருகப்பெருமானால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டு முருகப்பெருமானின் அருட்பெரும் தயவினாலே பெறுதற்கரிய ஒளிதேகம் பெற்று நாமும் அவர்களைப் போலவே மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம்.