News
MAY 2023
குரு உபதேசம் – 3675
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்றும், மது அருந்துகின்றவன், சூதாடுகின்றவன் போன்றவர்களது நட்பு அமையாமல் நம்மை காப்பான். ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று கூறி நாமஜெபம்தனை தொடர்ந்து செய்கின்றவர்களுக்கு நல்ல நட்பு அமையும், சொந்த வீடு அமையும், பண்புள்ள மனைவி, பிள்ளைகள் உண்டாகும், வறுமையில்லா வாழ்வினை வாழ்கின்ற அமைப்பையும் பெறுவார்கள். தொடர் பிறவிக்கு காரணம் அறியாமை என்றும், அறியாமைக்கு காரணம் மும்மலக் குற்றம்தான் என்பதையும், மும்மல குற்றத்தை வென்றால் அறியாமை நீங்கி சிறப்பறிவை பெறலாம் என்பதையும் அறிந்து முருகனருளால் அறியாமையை நீக்கிக் கொள்ள ஞானத்திற்குரிய அறிவும் அமையப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வையும் பெறுகின்ற வாய்ப்பையும் பெறலாம்.