News
MAY 2023
குரு உபதேசம் – 3691
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
சுத்தமும், அசுத்தமும் கலந்துள்ள தேகத்தை ஒரு மெல்லிய நுட்பமான வேதியியல் செய்து அசுத்தத்தை நீத்து சுத்த தேகமாகிய ஒளி தேகத்தை உறுதிபடுத்திக் கொண்டவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். இந்த ரகசியத்தை முதன் முதலில் கண்டவன் முருகப்பெருமான்தான். இந்த வாய்ப்பை நாமும் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு, தினம்தினம் மறவாமல் காலை மாலை என மூன்று வேளைகளும் குறைந்தது பத்து நிமிடமேனும், “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணபவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, தவறாமல் மனமுருகி பூஜைகளை செய்திட வேண்டும். ஜீவதயவுடைய முருகனின் ஆசியை பெறும் வகையிலே குறைந்தது மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும்.
இவ்விதமே செய்ய செய்ய, தனிப்பெரும் கருணை தயவுடைத்தாய் முருகப்பெருமானின் அன்பிற்கு பாத்திரமாகி முருகனது துணையாலே வழிகாட்டலாலே ஞானத்தின் வழித்துறைகள் புலப்பட்டு தொடரதொடர, நாமும் முருகப்பெருமான் பெற்ற அந்த அரிய பெறுதற்கரிய வாய்ப்பை பெறலாம் என்பதை அறியலாம்.
இந்த உண்மையை அறியாமல் போலி ஆன்மீகவாதிகளிடம் சிக்கிக் கொண்டால், உண்மை உணராது தேவையற்ற செயல்களிலே ஈடுபட்டு இறுதியில் நோய்வாய்ப்பட்டு மாண்டு போவார்கள் என்பதையும் அறியலாம்.