News
MAY 2023
குரு உபதேசம் – 3692
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உயிர்களை வதைத்து விளையாட்டுகளை விளையாடுவதும், அப்படிப்பட்ட விளையாட்டுகளை கண்டு மகிழ்வதும் பாவம் என்பது முருகப்பெருமானால் உணர்த்தப்படும். முருகனை வணங்காது, இது பாவம் என்பதையும் அறியாது, தன் மன மகிழ்விற்காக ஏதேதோ காரணங்கள் சொல்லி உயிர்களை வதைப்பார்களேயானால், அவர் முருகப்பெருமானை வணங்காதவராயினும் சரி, வணங்குவோராயினும் சரி அவர்களுக்கு தக்க விதத்தில் முருகப்பெருமானால் உணர்த்தப்படும்.