News
MAY 2023
குரு உபதேசம் – 3697
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி தினமும் மறவாமல் பூஜித்து தினம் தினம் தவறாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகப்பெருமான் திருவடிகளை மனமுருகி பூஜித்திடல் வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். இவ்விதம் தொடர்ந்து தவறாது செய்கின்ற மக்கள் மட்டுமே வருகின்ற ஞான சித்தர்கள் கால ஆட்சியிலே முருகப்பெருமானால் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை அறியலாம்.