News
MAY 2023
குரு உபதேசம் – 3701
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
கடவுள் முருகன்தான் என்பதை அறியும் உண்மை அறிவைப் பெறலாம். உண்மைக் கடவுளான முருகனை மனமுருகி பூஜிக்கும் வாய்ப்பை பெறலாம், சைவத்தை கடைப்பிடிக்க தக்க சூழ்நிலையும், மன உறுதியும் பெறலாம். சைவத்தை தடையின்றி கடைப்பிடிக்கலாம். அன்னதானம் செய்வதற்குரிய வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெற்று புண்ணியவானாகலாம். புண்ணியத்தைப் பெருக்கி பெருக்கி, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்ற மார்க்கத்தையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.