News
JUNE 2023
குரு உபதேசம் – 3717
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானியர் துணை இருந்தால் இகவாழ்வாகிய இல்லறத்தை செம்மையாக நடத்திட தேவையான சூழ்நிலை, பொருளாதாரம், அறிவு, ஆள்படை, செயல்களிலே வெற்றி ஆகியவற்றையும் இறைவனை அடைவதான பரவாழ்வாகிய துறவு வாழ்க்கையிலும், துறவிற்கு தேவையான பரிபக்குவம், சூழ்நிலை, தகுதி, பண்பு, அறிவு, செயலாற்றும் திறன் என அனைத்தையும் பெற்று எடுத்துக்கொண்ட செயல்களிலே வெற்றியும், எடுத்துக் கொண்ட லட்சியத்திலே வெற்றியையும் காணலாம். மனிதர்களால் எவ்வளவுதான் அறிவுடன் ஆழ சிந்தித்து முடிவெடுத்தாலும் ஞானியர் துணையின்றி செய்யும் எச்செயலும் செயல் முடிவிலே வெற்றியடைந்தது போல தோன்றினாலும் அது இறுதியில் துன்பத்தையே பரிசாக தரும் என்பதையும் அது இல்லறமாயினும் சரி, துறவறமாயினும் சரி, ஞானியர் துணையே வெற்றிக்கு காரணம் என்பதை அறியலாம்.