News
JUNE 2023
குரு உபதேசம் – 3729
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தானத்தில் சிறந்தது அன்னதானமே! அதை செம்மையாக செய்ய கற்றுக் கொண்டவன்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் என்பதை அறியலாம். மற்றைய தானங்கள் அனைத்தும் அன்னதானத்தின் பலனைவிட குறைவானதேயாம். அன்னதானம் என்பது உடலையும், உயிரையும் மகிழ்விப்பதால் எல்லா தானங்களிலும் சிறந்தது என்றும் ஜீவதயவின் முழு வெளிப்பாடு அன்னதானத்தினில் தான் அடைய முடியும் என்றும் அறியலாம். மற்றைய தானங்கள் வாய்ப்பு உள்ள போது, காலம் தாழ்த்திக்கூட செய்யலாம், ஆனால் மனிதர்களுக்கு பசியாற்றும் பரோபகார செயலான அன்னதானத்தில் ஒருபோதும் காலதாமதம் இருக்கக்கூடாது. காலம் தாழ்த்தி செய்யப்படும் அன்னதானம் ஜீவர்களுக்கு நலிவு உண்டாக்குவதால் வினை சூழும் என்பதையும் அறியலாம்.