News
JUNE 2023
குரு உபதேசம் – 3735
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நடைபெற இருக்கின்ற உலகப் பெருமாற்றத்தினில் பங்கு கொண்டு தொண்டு செய்ய விரும்புகின்ற தொண்டர்களெல்லாம் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை முருகனது திருநாம மந்திரங்களை சொல்லி பயபக்தியுடன் பூஜைகள் செய்திட வேண்டும், முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்து பிற உயிர்களை மகிழ்விக்க வேண்டும்.
இவ்விதம் நன்கு செய்பவர்களே உலக மாற்ற தொண்டர்களாக ஞானிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை அறியலாம்.