News
AUGUST 2023
குரு உபதேசம் – 3779
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் உலகில் நடக்கின்ற அநீதிகளை அழித்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை முருகனது தலைமையிலே இவ்வுலகிலே உண்டாகும். தற்காலத்தில் சடங்குகளால் நடைபெறும் மூடத்தனமான வழிபாடுகளெல்லாம் மாறி இனி உண்மை வழிபாடாம் கடவுளின் உண்மை நிலையை குறிக்கும் ஜோதி வழிபாடே ஜாதி, மத, இன, மொழி கடந்து பொது வழிபாடாய் உலகமெலாம் ஏற்றுக் கொள்ளப்பட்டு எல்லோராலும் பின்பற்றப்படும் என்பதை அறியலாம். இந்தவித கொள்கையை ஏற்போரெல்லாம் மிக்க அமைதியுடன் நலமான வாழ்வை வாழ்ந்து சிறப்படைவார்கள்.