News
AUGUST 2023
குரு உபதேசம் – 3786
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
பாவபுண்ணியங்களுக்கும், கடவுளுக்கும் பயப்படாமல் தனக்கு தோன்றியவாறு ஆட்சி செய்திட்ட மனிதர்கள் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்து, ஞானஆட்சி அமைப்பவன் முருகனே என்றும், அவனது ஞான ஆட்சியிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்ட மக்களுக்கே தவறாமல் முருகப்பெருமான் திருவடிகளை பூஜை செய்யும் மக்களுக்கே ஜீவதயவுடையோராய் விளங்கி பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்கும் பரோபகாரம் உள்ள மக்களுக்கே ஞான ஆட்சியில் வாய்ப்புகளை முருகன் தருவான் என்பதையும் அறியலாம். முருகனது கருணையை பெற்றால்தான் ஞானஆட்சியில் பங்கு கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.