News
AUGUST 2023

குரு உபதேசம் – 3787
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கையும் அறிந்த முருகப்பெருமானே ஆட்சி செய்ய இருப்பதால் முருகப்பெருமானின் தலைமைக்கு கீழ் இயங்கக்கூடிய அத்தனை தொண்டர்களும் பொருள்பற்று அற்றவராகவும், பந்தபாசத்திற்கு ஆட்படாதவர்களாகவும், ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடு அற்றவராகவும், உலக மக்களை சகோதரர்களாக எண்ணுகின்றவர்களாகவும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பதை அறியலாம்.
இவர்களால் தான் சமநீதி, சமத்துவம் உடைய ஆட்சியை உருவாக்க முடியும் என்பதையும் அறியலாம்.
முருகனது ஞான ஆட்சியில் பங்கு கொள்ள விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து தினம் தினம் மறவாமல் முருகனது திருவடிகளைப் பற்றி பூஜிப்பவர்களாக இருந்தால் ஆட்சியில் பங்குபெறும் வாய்ப்பை பெறலாம்.
