News
AUGUST 2023
குரு உபதேசம் – 3794
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஞானமே வடிவான முருகப்பெருமான் தலைமையில் ஞானிகளால் நடக்கும் ஞான ஆட்சியிலே குற்றம் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள். நிரபராதிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள். அப்படி குற்றம் செய்தவராயினும் அவர் செய்த குற்றத்திற்கு தக்கவாறுதான் தண்டனை அளிக்கப்படுமே தவிர மிகுதி தண்டனையும் அளிக்கப்பட மாட்டாது, குறைந்த தண்டனையும் அளிக்கப்பட மாட்டாது. ஞானஆட்சியிலே குற்றம் செய்தோர் ஒருபோதும் என்ன செய்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதும் வினை வினைத்தவன் வினையை அறுத்தே தீர வேண்டும் என்பதும் உறுதியாகும் என்பதையும் அறியலாம்.