News
AUGUST 2023
குரு உபதேசம் – 3795
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஞானத்தலைவன் முருகப்பெருமான் தலைமையில் நடக்கின்ற ஞான ஆட்சியிலே போலி கபட வேஷதாரிகள் தனது மோச வேலைகளை துவங்க எண்ணும்போதே ஞானிகளால் அடையாளம் காணப்பட்டு பூனையின் கையில் அகப்பட்ட கிளி போல மாட்டிக் கொள்வார்கள்.
கடவுளின் பெயரால், ஞானத்தின் பெயரால், யோகத்தின் பெயரால், பொருள் பற்றின் காரணமாக எந்த ஒரு போலி ஆன்மீகவாதிகளோ, பயிற்சி என்ற பெயரில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களை ஏமாற்றவோ, பொருள் பறிக்கவோ ஒருபோதும் இயலாது என்பதையும் கௌரவம், பொருள், காமத்தின் வயப்பட்டு பொதுமக்களுக்கு ஞானம், யோகம் என்ற பெயரிலே யாரேனும் தவறு செய்ய முற்பட்டால் கடுமையான விளைவுகளை முருகன் அருளால் அவர்கள் அடைவார்கள் என்பதையும் அறியலாம்.