News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3803
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானமே வடிவான முருகப்பெருமானின் ஞான ஆட்சியில் பண்புகளுக்கும், ஜீவதயவிற்குமே முதலிடம் என்பதால் பண்புகளை வளர்க்கும் விதமாகவும், ஜீவதயவையும், பக்தியையும், ஞானத்தையும், யோகத்தையும், நாகரீகத்தையும், வீர உணர்வுகளையும், ஒழுக்க நெறிகளையும் பிரதிபலித்து வளர்க்கும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படும் என்பதையும், மக்களை தீயநெறிக்கு அழைக்கும் விதமாகவோ, தீயநெறிகளை நியாயப்படுத்தியோ, புலன் கவர்ச்சிகளை தூண்டக் கூடிய வகையிலோ உள்ள ஊடகச் செய்திகள் கட்டுப்படுத்தப்படும் என்பதை அறியலாம்.