News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3807
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்.. கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் கடவுளின் பிள்ளைகளே, கடவுளின் பிள்ளைகளில் பாதிக்கப்பட்ட மக்களான ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்கள் மீதும் தயவு கொண்டு உதவிகள் செய்தால் அது கடவுளுக்கே செய்ததாக ஆகிவிடும் என்றும், அதை விடுத்து கௌரவத்திற்காகவும், ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், வீண் ஆரவார சடங்குகளை செய்து மனிதர்களுக்கு ஜீவதயவு செய்வதற்காக கொடுக்கப்பட்ட பொருளை விரயமாய் செலவு செய்வதை அந்த கடவுளே ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதையும், ஜீவதயவே கடவுளின் ஆசியைப் பெற உள்ள ஒரே மார்க்கம் வேறெந்த வகையிலும் யாருக்கும் எட்டா கடவுளை, மகிழ வைக்கவோ மனம் குளிர வைத்து ஆசியைப் பெறவோ முடியாது என்பதையும், ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல் என்பதால் பற்றுகளைத் துறந்த துறவிக்கும் பற்றுள்ள குடும்பஸ்தனுக்கும் பொதுவாய் உள்ள ஒரே மார்க்கமாகும் என்பதினால், ஜீவதயவை விட வேறொன்றும் இவ்வுலகினில் பெரிதல்ல என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் கடவுளின் வடிவம் தயவால் உண்டானது என்பதையும் அன்பே கடவுள் என்பதையும் அறியலாம்..