News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3829
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞான நூல்களை கற்க கற்க பக்தி வசப்படும். பக்தி செலுத்த செலுத்த முருகனது திருவடிகளே ஞானமளிக்கும் திருவடிகள் என்பதும் புலப்படும். முருகனது திருவடிகள் தவிர வேறொன்றாலும் நமது கர்ம வினைகளை நீக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது என்பதும், முருகனது அருள் ஒன்றினால்தான் அகிலாண்டகோடி பிரம்மாண்ட சக்திகள் கட்டுப்படுகின்றன என்பதும், அகத்தியர் முதல் அரங்கன் வரையிலும் முருகனது தயவால்தான் முருகனது அருளால்தான் ஞானிகளாய் ஆகி ஞானவர்க்கமே உண்டானது என்பதும் பலப்படும்.
முருகனை வணங்க வணங்க அருணகிரிநாதர் அருளியது போல் முருகா என ஓர் தரம் ஓதும் அடியவர் இணைதாள் முடிமேல் அருள்வோனே… என்பதும் சரணகமலாலயத்தில் அரை நிமிஷ நேரம் மட்டும், தவம் முறை தியானம் வைக்க நலமாகும் என அருளியதும் எவ்வளவு மிகப்பெரிய தத்துவம் என்பதும், பக்தியே ஞானிகளை உருவாக்கியுள்ளது என்பதும் புலனாகும்.