News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3831
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மனிதன் எடுத்த காமதேகத்தின் இயல்பினால் ஞானம் புலப்படாது. ஞானத்தின் மீதும் நம்பிக்கை உண்டாகாது. முருகப்பெருமானை வணங்க வணங்க காமதேகத்தின் இயல்புகள் குறைந்து, முதலில் தர்ம சிந்தையும், பக்தியும் உண்டாகி, தர்மமும் பக்தியும் பெருக பெருக, யோக ஞான அறிவு உண்டாகி அதன் பின் யோகப்பயிற்சி செய்து, பின் ஞானத்திற்குரிய அறிவும் பரிபக்குவமும் உண்டாகி இறுதியில் முருகனே அந்த தலைசிறந்த பக்தனுடன் வாசியோடு வாசியாக கலந்து காமதேகத்தை முற்றிலும் மாற்றி ஞானதேகமாக மாற்றித் தருவான் என்பதை அறியலாம்.
புண்ணியவான்களுக்கு வாசி நடத்தி தருவான் என்பது மகான் ராமலிங்க சுவாமிகளின் கருத்தாகும்.