News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3833
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பலகோடி யுகங்கள் தவமாய் தவமிருந்து வெற்றி பெற்றிட்ட முருகப்பெருமான் தாம் அடைந்த ஞானத்தின் உயர்நிலையாம் ஞானத்தின் வெற்றியாம் ஒளிதேகம் தனையும் மரணமிலாப் பெருவாழ்வையும் அடையும் முறைமைகளையும், அதன் வழிமுறைகளையும் தம்மை வணங்கும் அன்பர் தமக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிநிலைகளை வைத்து, அந்த அந்த நிலைகளுக்கு தக்கவாறு ஞானிகளை அன்பர் தமக்கு துணையாக்கி இறுதியில் தானே அவர்களை சார்ந்து வழி நடத்தி, வாசி நடத்தி, மும்மலக் கசடு நீக்கி பக்தனையும் தம்மைப் போலவே ஆக்கிக் கொள்வான் முருகன் என்பதை அறியலாம்.